ADDED : பிப் 02, 2024 02:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமரக் கன்றுக்கு தங்கத்தால் வேலியிட்டு சர்க்கரைத் தண்ணீர் ஊற்றினாலும் மாதுளம்பழம் கிடைக்காது. ஆனால் ஆடுமாடு கடிக்காமல் இருப்பதற்கு சாதாரண முள் வேலியிட்டு தண்ணீர் விட்டாலும் போதும் கன்று வளர்ந்து மரமான பின்னால் மாம்பழங்கள் கிடைக்கும். ஒரு மனிதனுக்கு எந்த துறையில் ஈடுபாடும், திறமையும் இருக்கிறதோ அதைக் கண்டறிந்து பயிற்சி அளித்தால் போதும். வாழ்வு சிறக்கும்.
ஆனால் மாமரத்தில் மாதுளம்பழத்தை எதிர்பார்ப்பது போல தற்காலத்தில் சில பெற்றோர்கள் குழந்தைகளிடம் இயல்பாக இருக்கும் திறமைகளைக் கண்டறிய முற்படுவதில்லை. தான் விரும்பும் துறையைத் தேர்வு செய்ய வேண்டும் என நிர்ப்பந்தம் செய்கின்றனர். ஒவ்வொரு மனிதனையும் அவரவருக்குரிய தனித்தன்மையுடன் ஆண்டவர் படைத்திருக்கிறார்.