நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கனம் என்பதை அனலியாவிடம் இருந்து தான் கற்க வேண்டும் என அந்த ஏரியாவாசிகளுக்கு தெரியும். அவள் ஒரு நாள் தன் வீட்டு பின்புறம் உள்ள லைட்டை எரிய விட்டு துாங்கப் போனாள். மறுநாள் காலையில் அவளது மகள், 'இந்த ஏரியாவிற்கே நீ தான் உதாரணம். நேற்று ஏன் பின்புறம் லைட்டுகளை விடிய விடிய எரிய விட்டேங்கிறது தான் எனக்கு புரியவில்லை என்றாள். அதற்கு அனலியாவோ! பக்கத்து வீட்டு ஆலிமா கூச்ச சுபாவம் உடையவள். அவங்க கரண்டு பில் கட்டலனு பீஸ பிடிங்கிட்டு போய்ட்டாரு வயர்மேன். அவளது மகளோ 10 ம் வகுப்பு தேர்வு எழுத போறா. இரவு முழுவதும் கண் விழித்து தேர்வுக்கு படிக்கணும் லைட்ட எரிய விட்டேன் என்றாள் அனலியா.