நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஞாபக சக்தி கொண்டது யானை. தனக்கு செய்த தீமையை எளிதில் அது மறக்காது.
ஒருமுறை காட்டில் யானை ஒன்று பசியால் வாடியது. அந்த வழியாக வந்த சிறுவன் ஒருவன் அதற்கு தேங்காய் கொடுத்தான். ஆசையுடன் வாங்கிய யானை, துதிக்கையால் அதை உடைத்த போது அதனுள் சுண்ணாம்பு நிரப்பி இருந்தது. சுண்ணாம்பு பட்டதால் துதிக்கையில் புண் உண்டானது. தான் பட்ட வேதனையை அது மறக்கவில்லை. அவன் வாலிபன் ஆன பின் ஒருமுறை காட்டுப்பகுதிக்கு சென்றான். அவனை அடையாளம் கண்ட யானை துரத்த ஆரம்பித்தது.
'பாவச்செயலில் ஈடுபட்டால் தண்டனை கிடைப்பது உறுதி'.