
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டுப்புழு ஒன்று கூட்டிலிருந்து வெளிவர கஷ்டப்பட்டு முயற்சித்தது. இதைப்பார்த்த கிறிஸ்டோபர் கத்தியால் மெதுவாக கூட்டை வெட்டி, அதை சுலபமாக வெளியே எடுத்தான். ஆனால் அதனால் பறக்க முடியவில்லை. பாவம் கீழே விழுந்துவிட்டது. இறுதியில் எறும்புகளுக்கு இரையானது. இந்த செயல் அவனது மனதை உலுக்கியது.
இதையெல்லாம் கவனித்த அவனது அம்மா, ''மகனே... அந்தப்பூச்சி கூட்டிலிருந்து வெளிவர எடுக்கும் முயற்சியால் அதன் உடல் வற்றும். தசை, நரம்புகள் பலமாகும். இந்த பொறுமைதான் அதை பறக்க வைக்கும். ஆனால் உனது அவசரம் அதை கொன்றுவிட்டது'' என்றார்.
பார்த்தீர்களா... இதுபோல்தான் நாமும். பல பிரச்னைகளை பொறுமையாக எதிர்கொண்டால், சாதனையாளராக மாறலாம்.