/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
செய்திகள்
/
ஜெபித்தால் எல்லாம் கிடைத்து விடுமா?
/
ஜெபித்தால் எல்லாம் கிடைத்து விடுமா?
ADDED : ஜூன் 10, 2013 02:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்திர விளக்கிலிருந்து கிளம்பி வரும் ஒரு தேவதை கேட்பதையெல்லாம் கொடுக்கும் என்று சிறுவர்களுக்கான கதைகளில் சொல்லப்பட்டிருக்கும். அது போன்று, ஜெபம் என்பது கேட்பதையெல்லாம் கொடுக்கக்கூடியது என்று தப்புக்கணக்கு போடக்கூடாது. அவ்வாறு, நாம் எண்ணினால் ஜெபத்தின் உண்மையான கருத்தை நாம் தவறவிட்டு விடுகிறோம். நாம் விரும்புகிறதைப் பெற்றுக்கொள்வதற்காக மாத்திரம் ஜெபத்தைப் பயன்படுத்தக் கூடாது. நமது தேவைகள், விருப்பங்கள் அனைத்தையும் குறித்து கரிசனை கொண்டவரும், நம்மைக் குறித்து உணர்வூட்டும் திட்டங்களை வைத்திருக்கிறவருமான தேவனோடு நம்மை இணைப்பதே ஜெபம்.
தேவனுடைய வார்த்தை இதழிலிருந்து...