
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சொற்பொழிவாளரான அசிசி நன்றாக பிரசங்கம் செய்வார். அவரின் பேச்சில் மயங்கி அவரை பலரும் குருவாக ஏற்றுக் கொண்டனர். அவரால் பயன் பெற்றவர்கள் அதிகம். வயதானாலும் அவர் அப்பணியை தவறாமல் செய்தார். ஒரு நாள் மலைபிரதேச மக்களுக்காக பிரசங்கத்திற்கு நடந்து சென்றார். அவர் சிரமப்படுவதை பார்த்த வழிப்போக்கர் ஒருவர் 'என்னிடம் உள்ள கழுதையில் ஏறிச் செல்லுங்கள்' என சொன்னார். நல்லதை சொன்னால், செய்தால் நல்லது நடக்கும் என்ற பொன் மொழி அவருக்கு ஞாபகம் வந்தது.

