ADDED : ஏப் 06, 2026 11:02 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த ஒரத்துார் சி.எஸ்.ஐ .,துாய பேதுரு ஆலயத்தில் உயிர்த்தெழுந்த திருநாள் பண்டிகை கொண்டாட்டம் நடந்தது.
நேற்று ஈஸ்டர் பண்டிகையொட்டி விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரத்துாரில் சி .எஸ் .ஐ., துாய பேதுரு ஆலய திருச்சபையில் அதிகாலையில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாள் சிறப்பு கூட்டு ஆராதனை நடைபெற்றது. ஆராதனையில் ஆயர் சாமுவேல் ஞானதாஸ் கலந்துகொண்டு இறை செய்தியை வழங்கினார் .சபை விசுவாசிகளுக்கு திரு விருந்து அளித்து புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் பெயர் சூட்டி ஞானஸ்நானம் வழங்கி,இந்திய திருநாட்டிற்காகவும் தமிழகத்திற்காகவும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காகவும் உலகில் நடைபெற்று வரும் போர் நிறுத்தத்திற்காகவும் சிறப்பு ஆராதனை மேற்கொண்டனர்.
முண்டியம்பாக்கம் ,விக்கிரவாண்டி பெரியதச்சூர், முட்டத்தூர், நேமூர், கக்கனூர், நரசிங்கனூர், உள்ளிட்ட பகுதிகளிலும் உயிர்த்தெழுதல் சிறப்பு ஆராதனை நடைபெற்றது
