
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனதில் அன்பு இருந்தாலே நல்ல வாழ்க்கை அமைந்துவிடும். அன்புதான் ஒருவரது மகிழ்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் ஆதாரம். மனிதநேயம், இரக்கம், பாசம், மன்னிப்பு என்னும் பலவழிகளில் அன்பானது வெளிப்படுகிறது.
அது எப்படி...
சகமனிதர்கள் - மனிதநேயம்,
சகஉயிர்கள் - இரக்கம்,
குடும்பத்தினர் - பாசம்,
பகைவர்கள் - மன்னிப்பு.
இப்படித்தான் பலரும் பலவகைகளில் அன்பை பரிமாறிக்கொள்கிறோம். இவையே அன்பின் வடிவங்களாகும்.