ADDED : செப் 03, 2014 04:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதுவாக இந்த உலகம், மகிழ்ச்சியின் ஊற்று எங்கே இருக்கிறது என்று அலைந்து திரிந்து நாடித்தேடுகிறது. அதை அடைய எதைச் செய்யவும், துணிச்சலுடன் இருக்கிறது. ஆனாலும், அப்படிப் பெற்றுக் கொண்ட சந்தோஷம், நாடித்தேடி போராடிய அளவுக்கு திருப்தியை தருவதில்லை. கடலின் ஓயாத அலைபோல் இது நீடிக்கிறதே தவிர, நிறைவான சந்தோஷமும் சமாதானமும் கிடைப்பதில்லை. ஆகவே, உலகம் நிறைவான சந்தோஷத்தை தவறான இடத்தில் தேடிக் கொண்டிருக்கிறது.
''நீங்கள் அப்பம் அல்லாததற்காக பணத்தையும், திருப்தி செய்யாத பொருளுக்காக பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்கு கவனமாய் செவி கொடுத்து நலமானதைச் சாப்பிடுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்,'' என்கிறார் இயேசுகிறிஸ்து. செய்வோமா!
- பரமன்குறிச்சி பெவிஸ்டன்