ADDED : செப் 02, 2023 06:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆதி திருச்சபை தந்தையரில் ஒருவரான போலிகார்ப், தன் 86வது வயதிலும் உற்சாகமாக செயல்பட்டார். அரசு அவரைக் கைது செய்து சிறையில் இட்டது. ஆண்டவரை வணங்கினால் மரண தண்டனை வழங்கப்படும் என உத்தரவிட்டது. அதை அவர் பொருட்படுத்தாமல், ''இத்தனை வருடங்களாக என்னை வழிநடத்தினார். இப்போது மகிழ்ச்சியோடு மரணத்தை ஏற்கிறேன்'' என்றார். அவர் உயிருடன் எரிக்கப்பட்ட போதும் சிரித்தபடி இருந்தார்.