ADDED : அக் 15, 2023 09:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாடங்களில் பெயிலாகி இருந்ததால் மகனிடம் ஏதுவும் பேசவில்லை தாய். அன்று இரவு அவனிடம் சாப்பிடுகிறாயா எனக் கேட்டாள். அவனும் ஆம் என தலையசைக்க கோதுமைமாவு, எண்ணெய், தண்ணீர் என எல்லாவற்றையும் தனித்தனியாக அவன் முன் கொண்டு வந்து வைத்தாள். இவற்றையெல்லாம் கலந்து சப்பாத்தியாக சுட்டுத் தந்தால் தானே சாப்பிட முடியும் இப்படி கொடுத்தால் எப்படி சாப்பிடுவேன் எனக் கேட்டான். எல்லா பாடங்களும் முக்கியம். ஆனால் எதிலும் தேர்ச்சி பெற வில்லையே என்றாள் தாய். மன்னித்துவிடு அம்மா இனிமேல் நன்றாக படிக்கிறேன் என்றான் மகன்.