/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
செய்திகள்
/
நாராக இருந்தாலும் பூவோடு சேருங்கள்
/
நாராக இருந்தாலும் பூவோடு சேருங்கள்
ADDED : ஜூன் 08, 2012 11:10 AM

முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த இயேசு கிறிஸ்துவின் சீடர்கள், 'இயேசுவை பிரதிபலிப்பவர்கள்' என்று அழைக்கப்பட்டார்கள். ஏனெனில், அவர்கள் தாங்கள் பின்பற்றிய தலைவரை தங்கள் மூலம் உலகத்திற்கு நினைப்பூட்டிக் கொண்டே இருந்தார்கள். அவர்களுடைய நடத்தையின் மூலம் அவர்கள் இயேசுகிறிஸ்துவோடு இருந்தவர்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தார்கள். இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றிய கிறிஸ்தவ விசுவாசிகளும் தங்கள் நடத்தையில், அவரை வெளிப்படுத்துகிறவர்களாகவும், வார்த்தையில் அன்பை வெளிப்படுத்துகிறவர்களுமாக இருந்தார்கள்.
டாக்டர் சார்லஸ் வீகிள் என்பவர் நற்செய்திப் பாடல்கள் பல எழுதியுள்ளார். அதில் ''இயேசுகிறிஸ்துவைப் போல் என் மேல் கரிசனையுள்ளவர்கள் யாருமல்ல'' என்ற அடிப்படையில் எழுதிய பாடல் மிகச் சிறப்பானது. ஒருமுறை, அவர் கலிபோர்னியாவிலுள்ள பாசடெனாவில் நடந்த வேதாகம (பைபிள்) மாநாட்டிற்கு கிளம்பினார். அங்கு பிரசித்தி பெற்ற ரோஜாத்தோட்டம் இருக்கிறது. வீகிள், அந்தத் தோட்டத்திற்கு சென்றார். பின், மாநாட்டு அரங்கிற்கு சென்று இருக்கையில் அமர்ந்ததும், அருகிலிருந்த ஒருவர், ''நீங்கள் இங்கு வரும் முன் ரோஜாத் தோட்டத்திற்கு போய் வந்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் உடையில் வீசும் மணத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது,'' என்றார்.
பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது போல, கிறிஸ்துவோடு சேர்ந்தவர்களிடம் அவருடைய குணநலன்கள் பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகமில்லை. நீங்களும், கிறிஸ்துவைப் பின்பற்றுவீர்கள் தானே!