ADDED : மே 02, 2023 01:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'அழகாக இருக்கும் சில மலர்களில் நறுமணம் இருப்பதில்லை. நறுமணமுள்ள மலர்களையே வண்டுகள் விரும்பும். அதுபோல நற்குணம் கொண்டவர்களை மட்டுமே ஆண்டவர் விரும்புகிறார்' என கூட்டத்தில் பெரியவர் ஒருவர் பேசினார்.
அதைக்கேட்டுக் கொண்டிருந்த சிறுவன். 'என்னையும் ஆண்டவர் விரும்புவாரா' எனக்கேட்டான். அதற்கு அவர், 'பெற்றோருக்கு கீழ்படிந்து நட. ஆசிரியருக்கு மரியாதை கொடு. உன் வேலையை நீயே செய். பிறருக்கு உதவு. இதை செய்தாலே போதும் உன்னை விரும்புவார்''என்றார்.

