நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நல்ல கேட்பாளனே நல்ல பேச்சாளன் என்பதும், பிறர் சொல்லைக்கேட்பது சிறந்த கலை என்பதும் புகழ் மொழிகள். ஆனால் ஒருவர் பேசும் போதும், பேசி முடிப்பதற்குள்ளாகவும் கேட்பவர் குறுக்கே பேசுவர். முதலில் நாம் நல்ல கேட்பாளராக இருக்க வேண்டும். அப்போது தான் நல்ல பேச்சாளராக திகழ முடியும். யார் எதை சொன்னாலும், எப்படி சொன்னாலும் பொறுமையாக கேட்க வேண்டும். அவர் சொல்லும் விஷயத்தில் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே பேச்சுக்கலையின் முதன்மையான விதிகளில் ஒன்று. எப்போது நாம் ரிமோட் உலகில் பயணிக்க ஆரம்பித்தோமோ அப்போதே பொறுமையை இழந்து விட்டோம். யாராக இருந்தாலும் நன்றாக பேசுவதற்கு பொறுமை அவசியம் என்பதை மறவாதீர்.

