
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்றைய காலத்தில் வருமானம் கூடினால் பலரும் ஆடம்பரமாக செலவழிக்கின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் தவறில்லை. ஆனால் ஆடம்பரத்தில் திளைத்து தேவையற்ற பொருட்களை வாங்குபவர்களே அதிகம். அதிலும் சிலர் தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். பணம் வாழ்விற்கு அவசியம் தான். ஆனால் அதுவே தவறான பாதைக்கு இழுத்துச் சென்றால் என்னாவது? எனவே தேவை போக மீதிப் பணத்தை தர்மம் செய்யுங்கள். அது உங்களை காக்கும்.

