sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

செய்திகள்

/

வேண்டாமே ஆடம்பரம்!

/

வேண்டாமே ஆடம்பரம்!

வேண்டாமே ஆடம்பரம்!

வேண்டாமே ஆடம்பரம்!


ADDED : செப் 24, 2013 12:57 PM

Google News

ADDED : செப் 24, 2013 12:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம் வீட்டில் திருமணம், புதுவீடு புகுதல் ... இவற்றையெல்லாம் ஆடம்பரமாக கொண்டாட வேண்டுமென நினைக்கிறோம். ஆடம்பரமாக நடந்தால் தான், மற்றவர்கள் மதிப்பார்கள் என்று பலரும் எண்ணுகிறார்கள்.

பைபிளில் யோவான் 5ம் அதிகாரத்தில், ''ஊர் முழுக்க பண்டிகை கொண்டாடப்பட்ட அந்த வேளையிலும், இயேசுநாதர் பெதஸ்தா குளத்தருகே அமர்ந்து நோயாளியைக் குணப்படுத்திக் கொண்டிருந்தார்,'' என சொல்லப் பட்டிருக்கிறது.

விழாக்கள் வருவதே ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காகத்தான் என்பதை கர்த்தரின் இந்தச் செயல் நமக்கு உணர்த்துகிறது. கிறிஸ்துமஸ், ஈஸ்டர் என்றெல்லாம் பல திருநாட்கள் வருகிறது... அன்றெல்லாம், நாம் எத்தனை ஏழைகளுக்கு உதவி செய்தோம் என எண்ணிப் பார்க்க வேண்டும். அதுபோல, நம் இல்ல விழாக்களில் விருந்துண்டவர்களில் எத்தனை ஏழைகள் இருந்தனர் என சிந்தியுங்கள்.

ஏழைகள் உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காகவே விழாக்களை நடத்த வேண்டும். ஆடம்பரமாய் செலவழியும் பணத்தை ஏழை இல்லங்களுக்குக் கொடுங்கள். விழாக்களைஎளிமையாக்கி கர்த்தரின் அன்பைப் பெறுங்கள்.






      Dinamalar
      Follow us