ADDED : ஏப் 06, 2026 12:02 PM

அ நிறம் | அளவு
பெரியகுளம்: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள சர்ச்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.
தேனியில் மதுரை ரோடு உலக மீட்பர் சர்ச், என்.ஆர்.டி., ரோடு பரிசுத்த பவுல் சர்ச்சில் சிறப்பு திருப்பலி நடந்தது.
பெரியகுளம் தென்கரை புனித அமல அன்னை சர்சில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடந்தது.
பாதிரியார் பீட்டர் சகாயராஜ் திருப்பலி நடத்தினார். சப்பரம் ஊர்வலம் சென்றது.
ஏராளமான கிறிஸ்தவர்கள் திருப்பலியில் பங்கேற்றனர்.
