
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிறர் நம்மை உயர்வாக நினைக்க வேண்டும் என மனிதர்கள் பலரும் விரும்புகின்றனர். ஆனால் நடைமுறை வாழ்வில் இது நடப்பதில்லை. பெரும்பாலும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்து மற்றவரை காயப்படுத்துகின்றனர். முதலில் மற்றவரை நாம் உயர்வாக நினைப்போம். அப்படி செய்தால்தான் அவர்களும் நம்மை கவுரவமாக நடத்துவர். யாராவது உங்களை விமர்சனம் செய்தால் அதை பொருட்படுத்தாதீர்கள். ஏனெனில் தகுதியானவர்களின் விமர்சனம் உங்களது குறைகளை சீர்படுத்தும் அல்லவா! இந்த அணுகுமுறையை பின்பற்றுங்கள். அமைதியான வாழ்க்கை அமையும்.

