ADDED : செப் 10, 2023 05:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதியவராக இருந்த தொழிலதிபரைத் தேடி இளைஞன் ஒருவன் வந்தான். ' நீங்கள் தொழிலில் நிறைய சம்பாதித்துள்ளீர்கள். அதில் கால் பங்கை தாருங்கள். வசதி வரும் போது திருப்பித் தருகிறேன்' எனக் கூறினான். அதற்கு முதியவரோ, 'உன்னுடைய இளமைப்பருவத்தை எனக்கு கொடு. நீ கேட்டதை நானும் தருகிறேன்' என்றார். யோசித்த அவன், 'அது எப்படி முடியும். உங்களைப் போல நானும் முதுமை அடையும் போது செல்வந்தனாக இருப்பேன்' என்றான்.
' யாரும் யாருக்கும் எதையும் தர முடியாது. மற்றவர்களை திருப்திப்படுத்த முடியாது. கடினமாக உழைத்தால் என்னைப் போல முன்னேறுவாய்' என அறிவுரை கூறி அனுப்பினார் தொழிலதிபர்.