
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏழை எப்படியும் வாழ்ந்து விடுவான். செல்வந்தனிடம், பணம் போய்விட்டால் நொறுங்கிப்போய் விடுவான். பெரும் செல்வந்தரான வியாபாரி, தனது வியாபாரத்தில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தார். மனம் மிகவும் கஷ்டப்பட்டது. தனக்கு ஆறுதல் வேண்டி துறவியர் மடத்திற்குச் சென்றார். ஆனால், அவரால் அமைதியாக தியானிக்க முடியவில்லை. குழப்பமடைந்த நிலையில் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
மடத்தின் குரு அவரைக்குறித்து தனது சீடர்களிடம்,'' தரையில் படுத்துத் தூங்குபவர்கள், ஒருபோதும் தங்கள் படுக்கைகளிலிருந்து கீழே விழுவதில்லை,'' என்றார்.இந்த சம்பவத்தின் மூலம் எளிய வாழ்வே என்றும் நிரந்தரம் என்பது தெளிவாகிறது.
'தேவனின் வார்த்தை' இதழிலிருந்து...