sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 24, 2026 ,தை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

செய்திகள்

/

நல்ல விதையை ஊன்றுங்கள்

/

நல்ல விதையை ஊன்றுங்கள்

நல்ல விதையை ஊன்றுங்கள்

நல்ல விதையை ஊன்றுங்கள்


ADDED : அக் 14, 2011 12:16 PM

Google News

ADDED : அக் 14, 2011 12:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெபிக்கப்பட்டிருக்கிறீர்கள்,'' என்கிறது பைபிள்.

ஒரு வித்துக்குள் அந்தச் செடியின் பரிபூரணமெல்லாம் அடங்கியிருக்கிறது. அதற்குள் உறங்கிக் கிடக்கும் ஒரு ஜீவனுண்டு. அது விதைக்கப்படும் போது அந்த ஜீவன் தட்டி எழுப்பப்பட்டு முளைத்து எழும்புகிறது. வளர்ந்து செடியாகி பல ஆயிரம் வித்துக்களை விளைவிக்கக் கூடியதாயிருக்கிறது. இது எத்தனை ஆச்சரியமான ஒரு ரகசியம்.

வித்துக்களில் பலவகை உண்டு.

முட்செடியை முளைப்பிக்கும் வித்துக்களும் உண்டு. அதே நேரத்தில் சுவை மிக்க பழவகைகளுக்குரிய வித்துக்களும் உண்டு. அந்தந்த வித்துக்கள் அந்தந்த வகையுள்ள செடிகளையும், மரங்களையுமே முளைப்பிக்கக் கூடியது.

ஆதாம் பூமிக்குரிய வித்தானவன். அவன் பாவம் செய்தபடியால் அவனது வித்தான சந்ததியர் அனைவரும் பாவத்தில் கர்ப்பம் தரித்து பாவத்தைப் பிறப்பித்தனர். அந்த வித்தில் சாபங்கள், வியாகுலங்கள் (துன்பங்கள்), வேதனைகள், மரணங்கள் வெளிவந்தது.

நம் அருமை ஆண்டவராகிய கிறிஸ்துவோ பரலோக வித்தானவர். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வித்தானவர். அவர் மூலம் கிருபையும், சத்தியமும், சமாதானமும் வெளிப்படுகிறது.

நாம் இரட்சிக்கப்படும் போது, கிறிஸ்துவாகிய வித்து நமக்குள் ஊன்றப்படுகிறது. நாம் வளரும்போது நித்திய ஜீவனுக்கு ஏதுவாய் வளர்கிறோம். விதையின்படியே செடியும் இருக்க வேண்டுமானதால், நாம் கிறிஸ்துவின் சாயலிலும், குணாதிசயத்துடனும் விளங்க வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது.

''தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான். ஏனெனில், அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது,'' என்கிறது பைபிள்.






      Dinamalar
      Follow us