
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பார்வை இல்லாதவர், காது கேட்காதவர், அவலட்சணமானவர் ஆகியோர் ஒரே வீட்டில் வாழ்ந்தனர். ஒருநாள் பாதிரியார் அந்த ஊருக்கு வரவே, அவரிடம் தங்களது குறைகளை நீக்குவதற்கு வழி யாது எனக்கேட்டனர் மூவர்.
அதற்கு அவரோ, ''அருகில் ஓடும் நதியில் மூழ்கி எழுந்தால், குணமடைவீர்கள்'' என்றார். அதன்படியே மூவரும் செய்யவே, இருவருக்கு மட்டும் பலன் கிடைத்தது. அவலட்சணம் உடையவரைத்தவிர. இதற்கான காரணத்தை பாதிரியாரிடம் கேட்டதற்கு, ''இருவரும் முழு நம்பிக்கையோடு செய்ததால், அவர்களுக்கு பலன் கிடைத்தது'' என்றார்.