ADDED : டிச 19, 2022 12:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிச்சை கேட்டு வருபவர்களை அன்புடன் வரவேற்று உபசரிப்பவள்தான் சாரா. தினமும் ஏழை, எளியவர்களுக்கு உணவு கொடுத்து மகிழ்ச்சி அடைவாள். ஒருநாள் இதை கவனித்த வெளியூர் காரர், இதற்கான காரணத்தைக் கேட்டார்.
அதற்கு சாரா, ''ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்தால் ஆண்டவர் மகிழ்ச்சி அடைவார். ஆகவேதான் எல்லோருக்கும் உணவிடுகிறேன்'' என்றாள்.
இதையே, 'ஏழைக்கு இரங்குகிறவன் ஆண்டவருக்கு கடன் கொடுக்கிறான்' என்கிறது பைபிள்.

