
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பலருக்கும் எதைப் பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று தெரிவதில்லை. சிலர் பயனற்ற விஷயத்தை குறித்து நீண்ட நேரம் பேசுவர். இதனால் நேரமும், ஆற்றலும்தான் வீணாகும். இல்லையெனில் பிறரை குறித்து தவறாக பேசுவர். இப்படி ஓயாது பேசுபவரின் மனம், கடலின் மேற்பரப்பு போன்று அலைபாய்ந்து கொண்டே இருக்கும். இவர்களுக்கும் அமைதிக்கும் வெகுதுாரம்.
பொதுவாக ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். சொற்களால் பிறரை வாழ வைக்கவும், சாகடிக்கவும் முடியும். பயனுள்ளதை மட்டும் பேசுவோம்.

