நீங்கள் 63 கிலோ இருக்கிறீர்கள். ஆனால், 500 கிலோ எடை தூக்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தகுதிக்கு மீறிய எடையைத் தூக்குவதால், உங்களை திறமைசாலி என்று வேண்டுமானால் ஒத்துக்கொள்ளலாம். ஆனால், பலசாலி என்று ஒப்புக்கொள்ள முடியாது. ஏன்?
பில்லிகிரஹாம் என்ற அறிஞர் இதற்குப் பதில் சொல்கிறார். ''உங்களுடைய சொந்தக் காரணங்களுக்காக நீங்கள் கண்ணீர் விடுவீர்களேயானால், அதுவே உங்களுடைய பலவீனம். ஆனால், மற்றவர்கள் மீது அன்பு கூர்ந்து அவர்களுக்காக கண்ணீர் விடுவீர்களேயானால் அது உங்களுடைய பலம். ஆண்டவர் மீதான உங்கள் அன்பை, மற்றவர்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பைக் கொண்டே அளவீடு செய்ய முடியும்,'' என்கிறார். ஆம்... இயேசுகிறிஸ்து மற்றவர்கள் மீது அன்பு கூர்ந்தார். பிறருக்காக ரத்தம் சிந்தினார். அதைப் போல நம் சக மக்களுக்காக உயிரையும் கொடுக்கும் தியாக உள்ளத்தைப் பெறுவதே நிஜமான அன்பாகும். அத்தகைய உள்ளம் கொண்டவரே உண்மையான பலசாலி ஆவார்.