நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உறவினரை பார்க்க பாதிரியார் ஒருவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்தார். உறவினருக்கு பிடித்த பழத்தை வாங்க கடைக்குச் சென்றார். அந்த பழம் கிடைக்கவில்லை.
இதை அருகில் இருந்து கவனித்த இளைஞன் ஒருவன், ஓடிச் சென்று அந்த பழத்தை கொண்டு வந்து கொடுத்தான். மகிழ்ச்சி அடைந்த அவர், பழத்தின் விலையைக் கேட்டார். அதற்கு அவனோ, '' நீங்கள் உங்கள் நாட்டினரிடம் எங்கள் நாட்டில் பழமே கிடைக்கவில்லை என சொல்லி விடாதீர்கள்'' என்று தெரிவித்ததோடு பணம் வாங்கவும் மறுத்தான். இளைஞனின் தேசப்பற்றைக் கண்டு வியந்தார் பாதிரியார்.