/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
செய்திகள்
/
காலம் வகுத்த கணக்கை யார் காணுவார்!
/
காலம் வகுத்த கணக்கை யார் காணுவார்!
ADDED : மார் 08, 2022 05:04 PM

வெள்ளம் பெருகும் நதிகளும் ஒருமுறை வறண்டு விடுகிறது. குளங்கள் கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன. மரங்கள் இலையுதிர்ந்து பின் தளிர்விடுகின்றன. அதுபோல்தான் நம் வாழ்க்கையும். ஒரு பிரச்னையை சந்தித்தால்தான், மீண்டும் அந்த பிரச்னை வராமல் இருக்கக்கூடிய வழியை கண்டுபிடிக்க முடியும்.
சிலர் புலம்புவது மட்டுமே வாழ்க்கை என்று இருப்பர். எதற்கெடுத்தாலும் புலம்பல். ஒரு அழுகை. சோகமான மனம். சிறிய பிரச்னையைக்கூட பெரிதாக பார்க்கும் மனோபாவம். பிரச்னையை எதிர்கொள்ள பயப்படுவதே இதற்கு காரணம். இவர்களை போன்றோர் ஒன்றை நினைவில் வைத்தால் போதும். துன்பம் அடுக்கடுக்காய் வருகிறதா... அடுத்து இன்பம் படையெடுத்து வரப்போகிறது. காலம் உங்களுக்கு என்று வகுத்த கணக்கை, இங்கே யார் காண முடியும்.