sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

ஆறுதல் தருவார் அண்ணாமலையார்

/

ஆறுதல் தருவார் அண்ணாமலையார்

ஆறுதல் தருவார் அண்ணாமலையார்

ஆறுதல் தருவார் அண்ணாமலையார்


ADDED : டிச 13, 2024 08:42 AM

Google News

ADDED : டிச 13, 2024 08:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்

பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ

மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்

அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.

தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்

துாமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற

ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை அண்ணல்

பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.

பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்

சூலிம்மணி தரைமேல்நிறை சொரியும்விரி சாரல்

ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்

காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே.

உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்

எதிரும்பலி யுணலாகவும் எருதேறுவ தல்லால்

முதிருஞ்சடை இளவெண்பிறை முடிமேல்கொள அடிமேல்

அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலை யதுவே.

மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி

அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை அண்ணல்

உரவஞ்சடை யுலவும்புனல் உடனாவதும் ஓரார்

குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே.

பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்

பருகுந்தனை துணிவார்பொடி அணிவாரது பருகிக்

கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி

உருகும்மனம் உடையார்தமக் குறுநோயடை யாவே.

கரிகாலன குடர்கொள்வன கழுகாடிய காட்டில்

நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள

எரியாடிய இறைவர்க்கிடம் இனவண்டிசை முரல

அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே.

ஒளிறுாபுலி யதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்

பிளிறுாகுரல் மதவாரண வதனம்பிடித் துரித்து

வெளிறுாபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை

அளறுாபட அடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே.

விளவார்கனி படநுாறிய கடல்வண்ணனும் வேதக்

கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்

அளவாவணம் அழலாகிய அண்ணாமலை அண்ணல்

தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே.

வேர்வந்துற மாசூர்தர வெயில்நின்றுழல் வாரும்

மார்பம்புதை மலிசீவர மறையாவரு வாரும்

ஆரம்பர்தம் உரைகொள்ளன்மின் அண்ணாமலை அண்ணல்

கூர்வெண்மழுப் படையான் நல்ல கழல்சேர்வது குணமே.

வெம்புந்திய கதிரோன்ஒளி விலகும்விரி சாரல்

அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்

கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுள் ஞான

சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே.






      Dinamalar
      Follow us