ADDED : செப் 19, 2025 09:07 AM

ஓம் துர்கையே போற்றி
ஓம் அன்னையே போற்றி
ஓம் அக்நீஸ்வரியே போற்றி
ஓம் அஷ்டமி நாயகியே போற்றி
ஓம் அவதுாறு அழிப்பவளே போற்றி
ஓம் அசுரர்க்கு எமனே போற்றி
ஓம் அன்பர்க்கு எளியவளே போற்றி
ஓம் அமரரைக் காப்பவளே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அறக்காவலே போற்றி
ஓம் அபகரத்தாளே போற்றி
ஓம் ஆதார சக்தியே போற்றி
ஓம் இறைவியே போற்றி
ஓம் இச்சா சக்தியே போற்றி
ஓம் ஈர்ப்பவளே போற்றி
ஓம் ஈடிலாளே போற்றி
ஓம் நாக தேவதையே போற்றி
ஓம் உன்மத்த பங்கியே போற்றி
ஓம் எண்கரத்தாளே போற்றி
ஓம் எட்டாக்குழலியே போற்றி
ஓம் எலுமிச்சை விரும்பியே போற்றி
ஓம் எதிர்ப்பைக் குலைப்பவளே போற்றி
ஓம் ஏழ்மை அகற்றுபவளே போற்றி
ஓம் ஏவல் குலைப்பவளே போற்றி
ஓம் ஒளிர்பவளே போற்றி
ஓம் ஓங்காரியே போற்றி
ஓம் கம்பீர உருவமே போற்றி
ஓம் கவலை நீக்குபவளே போற்றி
ஓம் காளியே போற்றி
ஓம் கதாயுததாரியே போற்றி
ஓம் கபாலியே போற்றி
ஓம் காப்பவளே போற்றி
ஓம் கிரிதுர்கையே போற்றி
ஓம் கிருஷ்ண சகோதரியே போற்றி
ஓம் குமாரியே போற்றி
ஓம் குறுநகையாளே போற்றி
ஓம் குங்குமப் பிரியையே போற்றி
ஓம் குலக்காவலே போற்றி
ஓம் க்ரியா சக்தியே போற்றி
ஓம் கோள்வினை தீர்ப்பவளே போற்றி
ஓம் சண்டிகேஸ்வரியே போற்றி
ஓம் சர்வ சக்தியே போற்றி
ஓம் சந்தனப் பிரியையே போற்றி
ஓம் சர்வ அலங்காரியே போற்றி
ஓம் சாமுண்டியே போற்றி
ஓம் சர்வாயுததாரியே போற்றி
ஓம் சிவதுர்கையே போற்றி
ஓம் வேல்கண்ணியே போற்றி
ஓம் சிம்மவாகினியே போற்றி
ஓம் சித்தி அளிப்பவளே போற்றி
ஓம் ச்யாமளையே போற்றி
ஓம் சீதளையே போற்றி
ஓம் செம்மேனியலே போற்றி
ஓம் செவ்வண்ணப்பிரியையே போற்றி
ஓம் ஜெயதேவியே போற்றி
ஓம் ஜோதிக்கனலே போற்றி
ஓம் ஞானசக்தியே போற்றி
ஓம் ஞாலச்சுடரே போற்றி
ஓம் தற்பரமே போற்றி
ஓம் தயாபரியே போற்றி
ஓம் திருவுருவே போற்றி
ஓம் திரிசூலியே போற்றி
ஓம் தீதெல்லாம் அழிப்பவளே போற்றி
ஓம் தீனர்க்காவலே போற்றி
ஓம் துஷ்டர்க்குத் தீயே போற்றி
ஓம் துர்கனை அழித்தவளே போற்றி
ஓம் துக்கம் தீர்ப்பவளே போற்றி
ஓம் நலமளிப்பவளே போற்றி
ஓம் நந்தர் குலக்கொழுந்தே போற்றி
ஓம் நவசக்தியே போற்றி
ஓம் நவகோணத்தில் உறைபவளே போற்றி
ஓம் நிமலையே போற்றி
ஓம் நிலவினை அணிந்தவளே போற்றி
ஓம் நிறைவே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவளே போற்றி
ஓம் படைத்தவளே போற்றி
ஓம் பாலிப்பவளே போற்றி
ஓம் பைரவியே போற்றி
ஓம் பயநாசினியே போற்றி
ஓம் பிரம்மசாரிணியே போற்றி
ஓம் பயங்கரியே போற்றி
ஓம் புவநேஸ்வரியே போற்றி
ஓம் பூஜிக்கப்படுபவளே போற்றி
ஓம் மலநாசினியே போற்றி
ஓம் மஹிஷாசுரமர்தினியே போற்றி
ஓம் மங்கள வடிவே போற்றி
ஓம் மகேஸ்வரியே போற்றி
ஓம் மங்கையர்க்கரசியே போற்றி
ஓம் நல்மகவு அளிப்பவளே போற்றி
ஓம் மாதர்துணையே போற்றி
ஓம் மாங்கல்யம் காப்பவளே போற்றி
ஓம் முக்கண்ணியே போற்றி
ஓம் முக்திஅளிப்பவளே போற்றி
ஓம் மூத்தவளே போற்றி
ஓம் மூலப்பொருளே போற்றி
ஓம் மூவுலகத் தாயே போற்றி
ஓம் மூவுலகும் வென்றவளே போற்றி
ஓம் யசோதபுத்ரியே போற்றி
ஓம் யமபயம் தீர்ப்பவளே போற்றி
ஓம் ராகுகால தேவதையே போற்றி
ஓம் ரவுத்ரியே போற்றி
ஓம் வல்லவளே போற்றி
ஓம் வாராஹியே போற்றி
ஓம் வீரஉருவமே போற்றி
ஓம் விஷ்ணு துர்கையே போற்றி
ஓம் வையகக் காப்பே போற்றி
ஓம் வைஷ்ணவியே போற்றி
ஓம் வெற்றி அளிப்பவளே போற்றி