ADDED : நவ 14, 2025 08:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
''சுவாமி! இதுவரை புண்ணிய காரியம் செய்ததில்லை. நான் என்ன செய்வது'' என வருந்தினார் ஏழை பக்தர் ஒருவர். ''நான் சொல்வதை கடைப்பிடி போதும்'' என்றார் காஞ்சி மஹாபெரியவர்.
1. காலையில் எழுந்ததும் 'நல்ல பொழுதாக அமையட்டும்' என வேண்டு.
2. எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் முதலில் பிரார்த்தனை செய்.
3. புண்ணிய நதி, பசு, நல்லவர்களை மனதால் நினை.
4. வாரத்தில் ஒருமுறை கோயில் வழிபாடு செய்.
5. அனைவரையும் நேசி. பகை உணர்வு வேண்டாம்.
6. பிற உயிர்களுக்கு உணவு கொடு. குறிப்பாக காக்கைக்கு சோறிடு.
7. முடிந்தளவுக்கு தர்மம் செய்.
8. நெற்றியில் திருநீறு, குங்குமம் இடு.
9. துாங்கும் முன்பு அன்று செய்த நல்லது, கெட்டதை சிந்தித்திடு.
10. இஷ்ட தெய்வத்தின் திருப்பெயரை சொல்லியபடி துாங்கு.
இதைப் பின்பற்றினால் உங்கள் வாழ்வு அர்த்தமுள்ளதாகும்.

