sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கருடா... வருவாயா...

/

கருடா... வருவாயா...

கருடா... வருவாயா...

கருடா... வருவாயா...


ADDED : ஆக 09, 2024 08:54 AM

Google News

ADDED : ஆக 09, 2024 08:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கருடனின் தாய் வினதை, தந்தை காஸ்யப முனிவர்.

* தாயின் பெயரால் 'வைநதேயன்' எனப் பெயர் பெற்றார் கருடன்.

* கருடனின் மனைவியர் ருத்ரா, சுகீர்த்தி.

* மகாவிஷ்ணுவுக்கு தொண்டு செய்பவர் 'நித்யசூரிகள்'. அதில் மகாவிஷ்ணுவின் வாகனமாக இருந்து தொண்டு புரிபவர் கருடன்.

* கருடனை பெரிய திருவடி என்றும் அனுமனை சிறிய திருவடி என்றும் அழைப்பர்.

* பெருமாள் கோயில் மதில் சுவர் மூலைகளில் கருடனின் சிற்பம் இருக்கும்.

* பஞ்சமுக ஆஞ்சநேயரின் பின்புறமாக இருப்பது கருட முகம்.

* அதர்வண வேதத்தில் உள்ள 32 வித்தைகளில் கருடனுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

* கருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து மல்லிகைப்பூ, மரிக்கொழுந்து, பச்சை, சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது விசேஷம்.

* கஸ்துாரி, புனுகு, குங்குமப்பூவை வாழைச்சாற்றில் கலந்து கருடனுக்கு சாத்தினால் விருப்பம் நிறைவேறும்.

* கருடன் சிலை அல்லது படம் வீட்டில் இருந்தால் வாஸ்து தோஷம் இல்லை.

* கருடனின் குரல் சாமவேத த்வனி ஆகும்.

* பறவை இனத்தின் மன்னர் என்பதால் கருடனை 'பக்ஷிராஜர்' என்பர்.

* 'கருட்' என்றால் சிறகு. இதிலிருந்து கருடன் என்னும் சொல் பிறந்தது.

* அடிக்கடி பாம்பு கண்ணில் பட்டால் கருடனை வழிபடுவது நல்லது.

* கோயில்களில் கருடனிடம் அனுமதி பெற்ற பின்பே பெருமாளை தரிசிக்க வேண்டும்.

* தலையில் சடாரி சாத்திய பிறகு கருடனுக்கு பின்புறம் உள்ள கொடிமரத்தின் கீழே விழுந்து வணங்கக் கூடாது.

* கருடனின் நிறம் பழுப்பு, கழுத்து மட்டும் வெண்மையாக இருக்கும்.

* கருடனைப் பார்ப்பதும் அதன் குரலைக் கேட்பதும் நல்ல சகுனம்.

* அதிகாலையில் கருடனை தரிசித்தால் நினைத்தது நிறைவேறும்.

* 'கருடமாலா' மந்திரம் படித்தால் கிரகதோஷம், முன்வினை பாவம் தீரும்.

* அமாவாசை, பவுர்ணமி, தமிழ் மாதப்பிறப்பு, கிரகணம், ஸ்ராத்த நாட்களில் கருடபுராணம் படிப்பது

நல்லது.

* மகாவிஷ்ணுவின் திருவடிகளைத் தன் கைகளால் கருடன் தாங்கி நிற்பதே கருடசேவை.

* ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், அதீத சக்தி, தேஜஸ் ஆகிய ஆறு குணங்களைக் கொண்டவர் கருடன்.

* ஏகாதசி, திருவோண விரத நாட்களில் கருடனின் பெருமைகளை படித்தாலும், கேட்டாலும் நன்மை கிடைக்கும்.

* கருடனின் உடம்பில் அரும்பும் வியர்வை பாம்பின் விஷத்தை முறிக்கும்.

* சப்த மாதர்களில் ஒருவரான வைஷ்ணவியின் வாகனம் கருடன்.

* பாற்கடலைக் கடைவதற்காக திருமாலின் கட்டளைப்படி மந்திர மலையை முதுகில் சுமந்து வந்தவர் கருடனே.

* கருடனைப் பார்க்கும் போது கன்னத்தில் போட்டுக் கொள்ளக் கூடாது.

* கருட தரிசனத்தால் சூரியனைக் கண்ட பனி போல் துன்பம் பறக்கும்.

* வெளியூருக்கு செல்லும் போதும், சுபநிகழ்ச்சி நடத்தும் போதும் கருடன் கண்ணில் படுவது நல்லது.

* கோயில் கும்பாபிஷேகத்தின் போது கருடன் வட்டமிட்டால் ஊருக்கே நன்மை உண்டாகும்.

* கருடனின் நிழல் பட்ட பூமியில் விளைச்சல் அதிகரிக்கும்.

* பறவைகளில் நான் கருடனாக இருக்கிறேன்' என்று பகவான் கிருஷ்ணர் கூறியுள்ளார்

* காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் கருடசேவையை அதிகாலையில் தரிசிப்பது விசேஷம்.

* கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார்கோவிலில் மூலவராக உள்ளவர் கல்கருடன். இவரே திருவிழாக் காலங்களில் வீதியுலா வருவார்.

* நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணங்குடியில் இரண்டு கைகளையும் காட்டிய நிலையில் காட்சி தருகிறார்.

* காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடி ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் கருடனுக்கு சிதறுகாய் உடைத்தால் தடை நீங்கும்.

* ஸ்ரீவில்லிபுத்துாரில் ெரங்கமன்னார், ஆண்டாள், கருடாழ்வார் மூவரும் ஒரே இடத்தில் உள்ளனர்.

* விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லில் (திருத்தண்கால்) கோயிலில் பாம்பு, அமிர்த கலசத்துடன் கருடன் உள்ளார்.

* கோயிலின் வாசலில் இருந்து பெருமாளை காண முடியாது. ஆனால் திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் நம்பாடுவான் என்னும் பக்தனுக்காக கருடனும், கொடி மரமும் சற்று விலகி நிற்பதால் பெருமாளை தரிசிக்கலாம்.

* துாத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஒன்பது கருட சேவை நடக்கும். நம்மாழ்வாரின் அவதார விழாவின் 5ம் நாளில் நவதிருப்பதிகளிலுள்ள உற்ஸவர்கள்(ஒன்பது பெருமாள்) ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருள்வர்.

* திருப்பதி மலைக்கு ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 'சுவாமி புஷ்கரணி' என்ற குளத்தைக் கொண்டு வந்தவர் கருடன்.

* திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் ஏழடி உயர கருடன் நின்ற கோலத்தில் பாம்பை அணிந்த நிலையில் உள்ளார்.

* கர்நாடகா மாண்டியா மாவட்டம் மேல்கோட்டை திருநாராயணபுரம் கோயிலில் பங்குனி ஏகாதசியன்று வைரமுடி சேவை நடக்கிறது. இந்த வைரமுடி(கிரீடம்) கருடனால் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்டது

* மவுரிய மன்னர்கள் கருடனை அதிர்ஷ்ட தேவதையாக கருதினர்.

* குப்தர்களில் குமார குப்தர், சமுத்திர குப்தர் இருவரும் பொன் நாணயங்களில் கருடனைப் பொறித்தனர்.

* சந்திரகுப்த விக்ரமாதித்தன் காலத்தில் நாட்டுக்காக கருடத்துாணை நிறுவினார்.

* 'சுவாதி திருநாள்' என்ற கேரள மன்னர் சங்கீதம் உள்ளிட்ட கலைகளில் வல்லவராக இருந்ததற்குக் கருட உபாசனையே காரணம்.

* ஆழ்வார்களால் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் 36 இடங்களில் கருடாழ்வார் பாடப்பட்டுள்ளார்.

* கருட உபாசனையில் சிறந்தவர் வேதாந்த தேசிகர். இவருக்கு கருடனால் உபதேசிக்கப்பட்டது ஹயக்ரீவ மந்திரம்

* கருடன் மீது வேதாந்த தேசிகன் பாடிய ஸ்தோத்திரங்கள் கருடதண்டகம், கருட பஞ்சாசத்.

* நாகபாசம் என்னும் அம்பினால் போர்க்களத்தில் மயங்கினர் ராம, லட்சுமணர். இவரை காப்பாற்றியவர் கருடன்.

* 'திருமாலும் கருடனும் ஒருவரே' என மகாபாரதம் கூறுகிறது.

* மகாபாரதப்போர் ஒவ்வொரு நாளும் ஒரு வியூகத்தின் அடிப்படையில் பதினெட்டு நாள் நடந்தது. கடைசிநாளில் கருட வியூகத்தை அமைத்தனர்.

* நவரத்தினத்தில் ஒன்றான மரகதத்திற்கு கருடோத்காரம் என்று பெயர்.

* அமிர்தக் குடத்தை எடுத்து வர தேவலோகம் சென்ற கருடன், அங்கிருந்து தர்பைப் புல்லையும் பூமிக்கு கொண்டு வந்தார். அமிர்தத்துடன் வந்ததால் அதற்கு 'அமிர்த வீர்யம்' என்று பெயர்.

* பாற்கடலில் கிடந்த பால்கட்டிகளை சிறகுகளில் அப்பிக்கொண்டு வந்து பூமியில் உதறினார் கருடன். அதையே திருமண்ணாக நெற்றியில் இடுகின்றனர்.

* கார்க்கோடகன் (பாம்பு) என்னும் பெயரைச் சொன்னால் ஏழரைச்சனியின் கடுமை குறையும். அந்த பாம்பையே மாலையாக அணிந்தவர் கருடன்.

* துவாரகையில் கிருஷ்ணர் இல்லாத சமயத்தில் அந்த நகரைப் பாதுகாக்க துணைநின்றவர் கருடன்.

* மனிதர்கள் செய்த பாவத்திற்கான தண்டனைகளை பட்டியல் இடும் நுால் கருடபுராணம்.






      Dinamalar
      Follow us