
நவ.1 ஐப்பசி 15: அமாவாசை விரதம். வள்ளியூர் முருகன் கலைமான் கிடா வாகனம், திருநெல்வேலி காந்திமதியம்மன் மஞ்சள் நீராட்டு, வீரவநல்லுார் மரகதாம்பிகை ஊஞ்சல் உற்ஸவம், சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம், மெய்கண்ட நாயனார் குருபூஜை.
நவ.2 ஐப்பசி 16: சகல முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா ஆரம்பம், குமாரவயலுார் முருகன், சிக்கல் சிங்காரவேலவர் உற்ஸவம் ஆரம்பம், உத்திர மாயூரம் வள்ளலார் சன்னதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
நவ.3 ஐப்பசி 17: சந்திரதரிசனம், சிக்கல் சிங்காரவேலவர் நாகாபரணக் காட்சி, திருவனந்தபுரம் சிவபெருமான் புறப்பாடு, ஸ்ரீபெரும்புதுார் மணவாளமாமுனிகள் பவனி, பூசலார் நாயனார் குருபூஜை.
நவ.4 ஐப்பசி 18: வள்ளியூர் முருகன் கேடயச்சப்பரம், மதுரை சோலைமலை முருகன் யானை வாகனம், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், திருவட்டாறு சிவன் பவனி.
நவ.5 ஐப்பசி 19: நாக சதுர்த்தி, துார்வா கணபதி, சதுர்த்தி விரதம், குமாரவயலுார் முருகன் கஜமுக சூரனுக்கு வாழ்வு தந்தருளல், மணவாள மாமுனிநட்சத்திரம், ஐயடிகள் காடவர்கோன் குருபூஜை, கரிநாள்.
நவ.6 ஐப்பசி 20: சிக்கல் சிங்காரவேலவர் தேர், இரவு உமாதேவியாரிடம் சக்திவேல் வாங்குதல், மாயவரம் கவுரி மாயூரநாதர் உற்ஸவம் ஆரம்பம், திருக்குருகைப்பிரான், சேனை முதலியார் திருநட்சத்திரம்.
நவ.7 ஐப்பசி 21: முகூர்த்த நாள், சஷ்டி விரதம், சகல முருகன் கோயில்களில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா, பிள்ளை லோகாச்சார்யார் தேர், கிருபானந்த வாரியார் நினைவு நாள்.