
நவ.21 கார்த்திகை 5: சந்திர தரிசனம். திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம். திருத்தணி முருகன் கிளி வாகனம். திருவிடைமருதுார் பிரகத்குசாம்பிகை புறப்பாடு. அழகர்கோவில் கள்ளழகர்கோயிலில் சுந்தரவல்லித்தாயார் பவனி. தாதாசாரியார் திருநட்சத்திரம்.
நவ.22 கார்த்திகை 6: திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் திருமஞ்சனம். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பால் அபிஷேகம்.
நவ.23 கார்த்திகை 7: முகூர்த்த நாள். ரம்பா திரிதியை. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு. மூர்க்க நாயனார் குருபூஜை. சாய்பாபா பிறந்த நாள்.
நவ.24 கார்த்திகை 8: வரசதுர்த்தி. சதுர்த்தி விரதம். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம். சகல சிவன் கோயில்களில் சங்காபிஷேகம். இன்று காலை 11:29 - 12:05 மணிவரை மனை, மடம், கோயில், கிணறு வாஸ்து செய்ய நன்று. அகோபிலமடம் 43வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். சிறப்புலி நாயனார் குருபூஜை.
நவ.25 கார்த்திகை 9: சுவாமிமலை, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம். பழநி முருகன் வீதியுலா. அகோபிலமடம் 34 வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம்.
நவ.26 கார்த்திகை 10: சஷ்டி, திருவோண விரதம். ஒப்பிலியப்பன் சீனிவாசப்பெருமாள் பவனி, சாத்துார் வெங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி. கரிநாள்.
நவ.27 கார்த்திகை 11: முகூர்த்த நாள். நந்த சப்தமி. திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ராமர் திருமஞ்சனம்.

