தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : மே 28, 2026 10:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 10:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மே 29 வைகாசி 15: முகூர்த்த நாள். மாயவரம், திருவாடானை, நயினார்கோவில், திருப்பத்துார், திருப்புகலுார், காளையார்கோவில், உத்தமர் கோவில் தலங்களில் தேர். பழநி முருகன், காட்டுபரூர் ஆதிகேசவப்பெருமாள் திருக்கல்யாணம்.

மே 30 வைகாசி 16: வைகாசி விசாகம். திருப்பரங்குன்றம் முருகன் பால் அபிேஷகம். பழநி முருகன், திருமோகூர் காளமேகப்பெருமாள் தேர். அகோபிலமடம் 7, 10வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். நம்மாழ்வார், திருவாய்மொழிபிள்ளை திருநட்சத்திரம். கரிநாள்.

மே 31 வைகாசி 17: பவுர்ணமி. மதுரை கூடலழகர், காட்டுபரூர் ஆதிகேசவப்பெருமாள், திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள், அரியக்குடி சீனிவாசப்பெருமாள் தலங்களில் தேர். திருப்பரங்குன்றம் முருகன் மொட்டையரசுக்கு எழுந்தருளல். காஞ்சி குமரக்கோட்டம் முருகன் திருக்கல்யாணம். துவாதசபட்டர் திருநட்சத்திரம். கரிநாள்.

ஜூன் 1 வைகாசி 18: சோழவந்தான் ஜனகை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி. திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் சப்தாவர்ணம். அகோபிலமடம் 35 வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம்.

ஜூன் 2 வைகாசி 19: சோழவந்தான் ஜனகை மாரியம்மன் தேர். ஸ்ரீபெரும்புதுார் மணவாளமாமுனிகள் புறப்பாடு. திருத்தணி முருகன் பால் அபிஷேகம். திருஞானசம்பந்தர், திருநீலநக்க நாயனார், திருநீலகண்ட யாழ்பாணர், முருகநாயனார் குருபூஜை.

ஜூன் 3 வைகாசி 20: காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் உபயநாச்சியார்களுடன் தேர். அரியக்குடி சீனிவாசப்பெருமாள் தெப்போற்ஸவம். குமரகுருபரர் சுவாமிகள் குருபூஜை.

ஜூன் 4 வைகாசி 21: முகூர்த்த நாள். சங்கடஹர சதுர்த்தி. வாஸ்து நாள். காலை 9:58 - 10:34 மணி வரை மனை, மடம், கோயில், கிணறு பூஜை செய்ய நன்று. திருத்தணி முருகன் பால் அபிஷேகம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us