தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஜூன் 25, 2026 10:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 10:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூன் 26 ஆனி 12: ராமலட்சுமண துவாதசி. கானாடுகாத்தான் சிவபெருமான் திருக்கல்யாணம். மதுரை மீனாட்சி அம்மன் ஊஞ்சலில் காட்சி. திருப்பதி பெருமாள் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.

ஜூன் 27 ஆனி 13: பிரதோஷம். திருக்கோளக்குடி, கண்டதேவி, கானாடுகாத்தான் தலங்களில் சிவபெருமான் தேர். திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி வருடாபிஷேகம். மதுராந்தகம் கோதண்டராமர், சாத்துார் வெங்கடேசப்பெருமாள், ராஜபாளையம் சமீபம் பெத்தவநல்லுார் மாயூரநாதர் பவனி. நாதமுனிகள் திருநட்சத்திரம்.

ஜூன் 28 ஆனி 14: திருநெல்வேலி நெல்லையப்பர் தேர். மன்னார்குடி ராஜகோபால சுவாமி வெண்ணெய்த்தாழி சேவை. சென்னை திருவல்லிக்கேணி அழகியசிங்கர் புறப்பாடு.

ஜூன் 29 ஆனி 15: பவுர்ணமி. அழகர்கோவில் கள்ளழகர் முப்பழ பூஜை. சாத்துார் வெங்கடேசப்பெருமாள் தேர். ஸ்ரீபெரும்புதுார் மணவாளமாமுனிகள் புறப்பாடு. திருப்புளியாழ்வார் திருநட்சத்திரம். காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா.

ஜூன் 30 ஆனி 16: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம். சுவாமிமலை முருகனுக்கு ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

ஜூலை 1 ஆனி 17: மதுராந்தகம் கோதண்டராமர் பவனி. திருத்தங்கல் சுவாமி, அம்பாள் கண்ணாடி சப்பரத்தில் சூர்ணோற்ஸவம். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பால் அபிஷேகம். அகோபிலமடம் 13வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம்.

ஜூலை 2 ஆனி 18: முகூர்த்த நாள். திருவோண விரதம். திருப்பதி பெருமாளுக்கு புஷ்பாங்கி சேவை. திருத்தணி முருகன் பால் அபிஷேகம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us