தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஜூலை 16, 2026 10:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 10:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூலை 17 ஆடி 1: சதுர்த்தி விரதம். தட்சிணாயன புண்ணிய காலம் ஆரம்பம். மதுரை மீனாட்சி அம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் பவனி. தேரெழுந்துார் ஞானசம்பந்தர் புறப்பாடு. படைவேடு ரேணுகாம்பாள் பவனி. மிலட்டூர் விநாயகர் புறப்பாடு. ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு.

ஜூலை 18 ஆடி 2: திருமயம் ஆண்டாள் புறப்பாடு. மன்னார்குடி ராஜகோபால சுவாமி, காரமடை அரங்கநாதர், திருச்சேறை சாரநாதர் திருமஞ்சனம். கரிநாள்.

ஜூலை 19 ஆடி 3: சஷ்டி, சமீகவுரி விரதம். ஸ்கந்த பஞ்சமி. குமார சஷ்டி. சங்கரன்கோவில் கோமதி அம்மன் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம். ராமநாதபுரம் கோதண்டராமர் திருக்கல்யாணம். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் ஊஞ்சல் சேவை.

ஜூலை 20 ஆடி 4: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் திருமஞ்சனம். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பால் அபிஷேகம்.

ஜூலை 21 ஆடி 5: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம். நத்தம் மாரியம்மன் பூந்தேர். வடமதுரை சவுந்திரராஜப்பெருமாள் உற்ஸவம் ஆரம்பம். பெருமிழலைக் குறும்பர் குருபூஜை.

ஜூலை 22 ஆடி 6: சங்கரன்கோவில் கோமதி அம்மன் ரிஷப வாகனம். ராமநாதபுரம் கோதண்டராமர் தேர். ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள் புறப்பாடு. அகோபிலமடம் 25வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை. பட்சிராஜர் திருநட்சத்திரம்.

ஜூலை 23 ஆடி 7: உபேந்திர நவமி. மதுரை மீனாட்சி அம்மன் தங்கக்குதிரை வாகனம். திருப்பரங்குன்றம் முருகன் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் பவனி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us