ADDED : ஆக 03, 2026 01:21 PM

ஆக.7 ஆடி 22: சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் தேர். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சந்திரபிரபை, ரெங்கமன்னார் சிம்ம வாகனத்தில் பவனி. இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம். படைவீடு ரேணுகாம்பாள் புறப்பாடு. மூர்த்தி நாயனார், புகழ்சோழ நாயனார் குருபூஜை.
ஆக.8 ஆடி 23: நயினார்கோவில் சவுந்தரநாயகி அம்மானை ஆடி வரும் திருக்கோலம். மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு. திருவாடானை சிநேகவல்லியம்மன் அன்ன வாகனத்தில் பவனி. அகோபிலமடம் 22வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்.
ஆக.9 ஆடி 24: ஏகாதசி விரதம். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தங்க பல்லக்கில் பவனி. திருத்தணி முருகப்பெருமான் தெப்பம். கூற்றுவநாயனார் குருபூஜை. நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் இரவு சிவலிங்க பூஜை செய்தல்.
ஆக.10 ஆடி 25: பிரதோஷம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சன்னதியில் ஐந்து கருடசேவை. ஸ்ரீபெரும்புதுார் மணவாளமாமுனிகள் உடையவருடன் புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதிக்கு பாலாபிஷேகம்.
ஆக.11 ஆடி 26: மாதசிவராத்திரி. சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் வசந்த உற்ஸவம். அகோபிலமடம் 36வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம். குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு. பத்ராசலம் ஸ்ரீராமர் புறப்பாடு.
ஆக.12 ஆடி 27: அமாவாசை விரதம். விருதுநகர் சமீபம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் திருவிழா. அழகர்கோவில் கள்ளழகர் தங்க கருட வாகனம், 18ம் படி கருப்பசாமி கோயிலில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட காட்சி.
ஆக.13 ஆடி 28: நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் கண்ணாடி பல்லக்கு. ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன், திருவாடானை சிநேகவல்லியம்மன், நயினார்கோவில் சவுந்தரநாயகி தலங்களில் தேர். சுவாமிமலை முருகன் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
