ADDED : ஆக 13, 2026 08:39 AM
ஆக.14 ஆடி 29: சந்திரதரிசனம். ஆடிப்பூரம். ஆண்டாள் திருநட்சத்திரம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரெங்கமன்னார் தேர் பவனி. நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் கண்ணாடி தேர். இருக்கன்குடி மாரியம்மன் திருவிழா. அகோபிலமடம் 26வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம்.
ஆக.15 ஆடி 30: சுவர்ண கவுரி விரதம். திருவாடானை சிநேகவல்லியம்மன், நயினார்கோவில் சவுந்திரநாயகியம்மன் தபசுக்காட்சி. ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தபசு மண்டபம் எழுந்தருளல்.
ஆக.16 ஆடி 31: சதுர்த்தி விரதம். நாக சதுர்த்தி. துார்வா கணபதி விரதம். மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆவணித்திருவிழா ஆரம்பம். கருங்குருவிக்கு உபதேசம் செய்தல். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன், திருவாடானை சிநேகவல்லியம்மன் திருக்கல்யாணம். தேரெழுந்துார் திருஞானசம்பந்தர் புறப்பாடு.
ஆக.17 ஆடி 32: விஷ்ணுபதி புண்ணிய காலம். கருட பஞ்சமி. விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர், குறுக்குத்துறை முருகப்பெருமான் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம். மதுரை சோமசுந்தரர் நாரைக்கு முக்தியருளல்.
ஆக.18 ஆவணி 1: சஷ்டி விரதம். மதுரை சொக்கநாதர் மாணிக்கம் விற்றருளல். சுவாமிமலை முருகன் தங்கப்பூமாலை சூடியருளல். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம்.
ஆக.19 ஆவணி 2: மதுரை சொக்கநாதர் தருமிக்கு பொற்கிழி அருளல். திருத்தணி முருகன் பால் அபிேஷகம். கரிநாள்.
ஆக.20 ஆவணி 3: மதுரை சோமசுந்தரர் உலவாய்க்கோட்டை அருளிய திருவிளையாடல். ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் பவனி. திருப்பதி பெருமாள் புஷ்பாங்கி சேவை.
