sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜூலை 18, 2024 11:26 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 11:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சி.சாரதி, அவிநாசி, திருப்பூர்.

* பதட்டப்படுகிறேன்... யாரை வழிபடலாம்?

தினமும் மாலை (5:30- 7:30 மணி) விளக்கேற்றி கந்தர் அனுபூதி பாடி முருகனை கும்பிடுங்கள்.

பா.முத்து, காட்டுமன்னார்கோவில், கடலுார்.

*அட்சரம் என்றால்...

எழுத்து, அழிவில்லாதது என இதற்கு இரண்டு பொருள் உண்டு.

சி.குமார், கீரனுார், திண்டுக்கல்.

*காலபூஜை, பிரார்த்தனை பூஜை என்றால் என்ன?

கோயில் சார்பாக நடப்பது காலபூஜை (ஒன்று முதல் ஆறு காலம்) பக்தர்கள் தங்களுக்காக செய்வது பிரார்த்தனை பூஜை.

நா.விஸ்வா, நங்கநல்லுார், சென்னை.

*பூஜைக்குரிய பூக்கள் எவை?

தாமரை, மல்லிகை, வில்வம், துளசி, செம்பருத்தி, முல்லை, அரளி, எருக்கு, நந்தியாவர்த்தம்.

மு.நீலவேணி, திருமங்கலம், மதுரை.

*பெண்கள் சிவதீட்சை பெறலாமா?

இருபாலரும் தீட்சை பெறலாம். அதுவே பிறவிப்பயன்.

ஆர்.ரவிக்குமார், நொய்டா, டில்லி.

*கர்மபலன் எப்போது வேலை செய்யும்?

ஜென்ம ராசியில் குரு, அஷ்டமத்தில் சனி, ஏழரைச்சனி இது போன்ற காலங்களில் வேகமாக வேலை செய்யும்.

அ.காசிராஜன், கருநாகப்பள்ளி, கன்னியாகுமரி.

*ஆவாஹனம் என்றால்...

கடவுளை வரவழைத்தல். இதற்கு விசேஷ மந்திரம், முத்திரைகள் உண்டு.

வி.ஆதிசேஷன், சிவாஜிநகர், பெங்களூரு.

*மண்டலம் என்பது...

மூன்று பட்சங்களைக் கொண்டது ஒரு மண்டலம். ஒரு பட்சம் 15 நாள். ஆக 45 நாள். 41, 48 என்ற கணக்கும் உண்டு.

ர.ராதிகா, ஆத்துப்பாலம், கோயம்புத்துார்.

*சிவனுக்கு மாவடு படைப்பது ஏன்?

சிவனுக்கு படைக்க சாதம், கீரை, மாவடுவை சிவனடியாரான அரிவாட்டாயர் எடுத்துச் செல்லும் போது அவை சிதறின. அடியாரின் வருத்தம் தீர, 'மாவடு உண்டோம்' என்றார் சிவன். இந்நிகழ்வு திருவாரூர், தண்டலைச்சேரியில் நடந்ததால் மாவடு படைக்கின்றனர்.

வி.நாச்சியப்பன், புளியங்குடி, தென்காசி.

*மன்னார்குடி செங்கமலத்தாயாரின் சிறப்புப் பெயர் என்ன?

படிதாண்டா பத்தினி. திருவிழா நாளில் கூட இவள் கோயிலை விட்டு வெளியே வராததால் இப்பெயர் வந்தது.






      Dinamalar
      Follow us