sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : அக் 24, 2024 02:59 PM

Google News

ADDED : அக் 24, 2024 02:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சு.விமலா, அகத்தீஸ்வரம், கன்னியாகுமரி.

*தீபாவளி என்றால்...

ஆவளி என்றால் வரிசை. தீபங்களை வரிசையாக ஏற்றுவது தீபாவளி.

சி.சுதாமதி, மணலிபட்டு, புதுச்சேரி.

*முன்னோரை தீபாவளியன்று வழிபடலாமா?

தீபாவளியன்று அமாவாசை வந்தால், தர்ப்பணம் செய்து முன்னோரை வழிபட வேண்டும்.

எம்.வனிதா, அடகூர், மைசூரு.

*பட்டாசு வெடிக்கும் பழக்கம் எப்படி வந்தது?

உல்காமுகம்' என்னும் தீப்பந்தத்தை வெடிக்கும் பழக்கம் புராண காலத்தில் இருந்தது. தற்போது அது பட்டாசாக மாறி விட்டது.

ரா.கங்கா, பப்பன்கிளேவ், டில்லி.

*தீபாவளிக்கும், திருக்கார்த்திகைக்கும் என்ன தொடர்பு?

தொடர்பு இல்லை. ஆனால் இரண்டு நாளிலும் தீபம் ஏற்றுகிறோம்.

வெ.புனிதா, புளியரை, தென்காசி.

*ராமாயணத்திற்கும் தீபாவளிக்கும் என்ன தொடர்பு?

சீதையை மீட்டு ராமர் அயோத்திக்கு திரும்பிய நாள் தீபாவளி. அன்று தீபமேற்றி மக்கள் அவர்களை வரவேற்றனர்.

வி.நடராஜன், தேவகோட்டை, சிவகங்கை.

*தீபாவளி, சுதந்திர தினம் - என்ன ஒற்றுமை...

ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்ற நாள் சுதந்திர தினம். நரகாசுரனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள் தீபாவளி.

என்.மணி, தொட்டிக்கலை, திருவள்ளூர்.

*தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்?

நரகத்தில் உள்ள முன்னோர் விடுபட தீபாவளி அன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கிறோம்.

கே.வினோத், கொடைக்கானல், திண்டுக்கல்

*தீபாவளிக்கு புத்தாடை அணிவது ஏன்?

நரகாசுரன் தன் இறப்பை புத்தாடையுடன் கொண்டாட வேண்டும் என கிருஷ்ணரிடம் வரம் பெற்றதால்...

டி.லட்சுமி, உடுமலைப்பேட்டை, திருப்பூர்.

*தீபாவளியன்று சுமங்கலிகள் விரதமிருப்பது ஏன்?

தம்பதி ஒற்றுமைக்காக கேதாரகவுரி விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுகின்றனர்.






      Dinamalar
      Follow us