
ஆர்.பிருதிவிராஜ், மெரோலி, டில்லி: நிம்மதியாக வாழ...
தாமரை இலை தண்ணீரைப் போல பற்று இல்லாமல் வாழுங்கள்.
வி.விஷ்ணு, கம்மாபுரம், புதுச்சேரி: கோபுர ஸ்துாபி என்றால்...
கோயில் கோபுரத்தின் மீதும், கருவறை மேல் உள்ள விமானத்தின் மீதும் இருக்கும் கலசம்.
கே.சுப்பிரமணி, சிங்காநல்லுார், கோயம்புத்துார்: சாதுர் மாஸ்யம் என்றால்...
மழைக் காலத்தில் துறவிகள் நான்கு மாதம் ஓரிடத்தில் தங்கி உபதேசம் செய்வது.
இ.செல்வி, கன்னிவாடி, திண்டுக்கல்: குழந்தைக்கு ஞாபக சக்தி குறைவாக உள்ளதே...
மனப்பாட பயிற்சி, கணித வாய்ப்பாடு பயிற்சிகளில் ஈடுபடுத்துங்கள். புதன்தோறும் சரஸ்வதியை வழிபடுங்கள்.
வ.பகவதி, நாகர்கோவில், கன்னியாகுமரி: பாடகர் ஆக ஆசை. என்ன செய்யலாம்?
பவுர்ணமி அன்று ராஜேஸ்வரி அம்மனுக்கு தேனால் அபிஷேகம் செய்யுங்கள். அத்துடன் பயிற்சி, விடாமுயற்சி, அக்கறை அவசியம்.
நா.விஸ்வா, அயனாவரம், சென்னை: முயற்சியில் தடை, தாமதம் ஏற்படுகிறதே...
வியாழன் அன்று காலையில் 6:00 - 7:00 மணிக்குள் விநாயகருக்கு தயிர் அபிஷேகம், அருகம்புல் அர்ச்சனை செய்யுங்கள்.
மு.அபிராமி, நாங்குநேரி, திருநெல்வேலி: தாலியில் சுவாமி பெயரை பொறிக்கலாமா...
பொறிக்கலாம். எனினும் தாலியில் குடும்ப வழக்கத்தை பின்பற்றுங்கள்.
ரா.காசி, மேலுார், மதுரை: பிறந்த நட்சத்திரத்தன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாமா?
பிறந்த நட்சத்திரத்தன்று சனிக்கிழமையாக இருந்தால் குளிக்கலாம்.
ரா.அமராவதி, ராமநகரம், பெங்களூரு: இரண்டு மாத இடைவெளியில் பெற்றோர் இறந்தனர். ஒரே நாளில் திதி கொடுக்கலாமா?
அவரவர் இறந்த திதியில் தான் கொடுக்க வேண்டும்.