
ஆர்.ஆஷா, திருநின்றவூர், திருவள்ளூர்: *எந்த நாளில் கிரிவலம் செல்லலாம்?
பவுர்ணமி அன்று சுற்றுவது நல்லது. அன்று கூட்டம் அதிகம் இருப்பதால் எந்த நாளிலும் சுற்றலாம்.
எம்.உஷா, சிவாஜிநகர், பெங்களூரு: *முன்பு அவ்வையார் அம்மனை வழிபட்டேன். இப்போது தொடரலாமா?
தொடரலாம். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் இக்கோயில் உள்ளது.
என்.நிஷா, அருமநல்லுார், கன்னியாகுமரி: *பெற்றோருக்கு பணம் கொடுத்தாலும் கவனிக்க முடியவில்லை. பாவம் சேருமா?
இல்லை. பெற்றோரை கவனிக்க வாய்ப்பு இருந்தும் புறக்கணிப்பது மகாபாவம்.
மு.அனுஷா, பூவரசன்குப்பம், விழுப்புரம்: *பரிகாரம் செய்ய நல்ல நாள் எது?
உங்களின் நட்சத்திரத்திற்கு பொருத்தமான நாளாக இருக்க வேண்டும்.
ரா.த்ரிஷா, கோவில்பட்டி, துாத்துக்குடி: *திருஷ்டி தீர...
தேங்காய் (அ) பூசணிக்காயால் தலையை இட, வலமாக சுற்றுங்கள்.
டி.அக் ஷிஷா, சாயல்குடி, ராமநாதபுரம்: *வளர்பிறை சதுர்த்தியன்று விரதமிருந்தால்...
உங்கள் விருப்பம் நிறைவேறும்.
மா.ஷைலஷா, கோத்தகிரி, நீலகிரி: *வெள்ளிக்கிழமை விரதம் இருப்பது எப்படி?
காலை முதல் மாலை வரை விரதமிருந்து முருகன் கோயிலுக்குச் செல்லுங்கள். பிறகு சாப்பிடுங்கள்.
கோ.மோக் ஷா, நத்தம், திண்டுக்கல்: *மனப்பொருத்தம் பார்த்து திருமணம் நடத்தலாமா?
தாராளமாக நடத்தலாம். முடிவெடுத்த பின் மாற்றக் கூடாது.
ரா.மோகன், மதுராந்தகம், செங்கல்பட்டு: *விவாகரத்தான பெண்ணை மறுமணம் செய்யலாமா?
செய்யலாம். துணை இன்றி பெண்கள் இருக்க கூடாது.