
எம்.அனுஜா, அச்சிறுப்பாக்கம், செங்கல்பட்டு: பேண்ட் அணியும் போது பின்பாக்கெட்டில் பர்ஸ் வைக்கலாமா?
மகாலட்சுமியின் அம்சம் பணம் என்பதை உணர்ந்தால் இப்படி செய்ய மாட்டீர்கள்.
ஆர்.ஆத்மஜா, திருநள்ளாறு, புதுச்சேரி: அத்திப்பழத்தை தானம் செய்தால்....
நோய் நீங்கும்.
கே.கிரிஜா, திருப்புத்துார், சிவகங்கை: உறவினர், நண்பர்கள் இறப்பது போல கனவு வரலாமா.....
வரலாம். உறவினர், நண்பர்கள் உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ்வர்.
எஸ்.பூமிஜா, பழநி, திண்டுக்கல்: வெள்ளி அன்று ஆண் குழந்தை பிறந்தால்...
ஞாயிறு - ஆண்
வெள்ளி - பெண் பிறப்பது யோகம். மற்ற நாளில் பிறப்பதும் கடவுள் கொடுத்த வரம்.
பி.பத்மஜா, சிந்துபூந்துறை, திருநெல்வேலி: தங்கையின் மீது அண்ணன் அன்பாக நடக்க...
தங்கை திரவுபதியின் மானம் காத்த கிருஷ்ணரை வழிபடுங்கள். 'கோபாலா... கோவிந்தா...' என ஜபியுங்கள்.
வி.ரோஜா, அன்னுார், கோயம்புத்துார்: புனித தீர்த்தம் எத்தனை நாள் வீட்டில் இருக்கலாம்?
எவ்வளவு நாள் வேண்டுமானாலும் இருக்கலாம்.
சி.சரோஜா, அகத்தீஸ்வரம், கன்னியாகுமரி: தாத்தாவுக்கு பேரன் திதி தரலாமா?
திதி கொடுக்கும் அதிகாரம் மூத்த மகனுக்கே உண்டு. மகன் இல்லாவிட்டால் பேரன் தரலாம்.
டி.சிந்துஜா, கல்யாண்புரி, டில்லி: தர்ப்பணம் செய்த பின் கோயிலில் வழிபடலாமா?
தர்ப்பணம் என்பது புனிதச் செயல். அது முடிந்த பின் கை, கால்களை சுத்தம் செய்து திருநீறு பூசி கோயிலுக்கு செல்லலாம்.
ஜி.வனஜா, சென்னிமலை, திருப்பூர்: கிரகணத்தின் போது விளக்கேற்றலாமா?
விளக்கேற்றி கிரகணம் முடியும் வரை ஜபியுங்கள். பிறகு தலை குளித்து பூஜை செய்யுங்கள்.