sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : அக் 02, 2025 11:39 AM

Google News

ADDED : அக் 02, 2025 11:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 கே.தினேஷ், திருப்பரங்குன்றம், மதுரை: தினமும் மவுனவிரதம் இருக்கலாமா?

தினமும் காலையில் குளித்த பின் ஒருமணி நேரம் மவுனமாக இருக்கலாம்.

பி.யமுனா, ஏரோசிட்டி, டில்லி: ஆதியந்த பிரபு என்றால்...

விநாயகர் பாதி, அனுமன் பாதியாக இணைந்த வடிவம். இவரை வழிபட வெற்றி கிடைக்கும்.

ஆர்.கங்கா, தரமணி, சென்னை: தலைமைப்பதவி கிடைக்க...

தகுதி, திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் செவ்வாய் அன்று விரதமிருந்து முருகன் கோயிலுக்கு செல்லுங்கள்.



வி.நர்மதா, மருதமலை, கோயம்புத்துார்: அன்னபூரணிக்கு என்ன நைவேத்யம் செய்யலாம்?

சாதத்தில் எதையும் சேர்க்காமல் நைவேத்யம் செய்யலாம்.

ஆர்.கிருஷ்ணா, திருத்தணி, திருவள்ளூர்: பூஜையின் போது மணி ஓசை கட்டாயமா...

மணி ஓசை கேட்பதால் கடவுளைத் தவிர வேறு சிந்தனை வராது.

டி.சிந்து, திருநள்ளாறு, புதுச்சேரி: விருப்பம் நிறைவேற...

திங்கள் அன்று சிவனுக்கு விரதமிருங்கள். இதை தொடர்ந்து செய்வதால் குடும்பத்திற்கு நன்மை.

ஏ.மைக்கேல், கோவில்பட்டி, துாத்துக்குடி: இன்றைய பெண்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரை...

இந்திய கலாசாரத்தை பின்பற்றினால் அவர்களுக்கும், நாட்டிற்கும் நல்லது.

எஸ்.கோமதி, கடையநல்லுார், தென்காசி: வழிபாட்டில் மஞ்சளுக்கு முதலிடம் ஏன்?

மஞ்சள் என்றால் மங்களம். அதனால் தான் மஞ்சளில் பிடித்த பிள்ளையாரை பூஜையில் வைக்கிறோம்.



கே.சரஸ்வதி, வேடசந்துார், திண்டுக்கல்: வழிபாட்டின் போது பசு இல்லாவிட்டால் கன்றை பூஜிக்கலாமா?

பூஜிக்கலாம்.






      Dinamalar
      Follow us