
வீ.கனகவள்ளி, குரோம்பேட்டை, சென்னை: வீண்பழியில் இருந்து தப்பிக்க...
ஞாயிறன்று ராகு காலத்தில் (மாலை 4:30 - 6:00 மணி) சரபேஸ்வரரை வழிபடுங்கள்.
ரா.ரெங்கசாமி, வடுகபட்டி, தேனி: துவார பாலகர் என்பவர்கள்...
கருவறையின் முன் உள்ள இவர்கள் பெயர் சண்டன், பிரசண்டன். 'தெய்வம் தான் எல்லாம்' என நமக்கு காட்டுகின்றனர்.
ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம், திருவள்ளூர்: நவதானியத்தை நைவேத்யம் செய்யலாமா?
செய்யலாம். இது நவக்கிரகத்திற்கு உரியது.
மு.உஷா, திருநகர், மதுரை: கைக்குழந்தைக்கு திருஷ்டி சுற்றுவது கட்டாயமா...
ஆம். வாரம் ஒருமுறை மிளகாய், உப்பு வைத்து சுற்றுங்கள்.
பி.முனியசாமி, கல்யாண்புரி, டில்லி: ஆன்மிக சங்கங்களில் ஆண்டு விழா அவசியமா...
அவசியம் தான். தங்களின் தர்மச் செயலை மற்றவருக்கு இதன் மூலம் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
எம்.கருப்பசாமி, வீரவநல்லுார், திருநெல்வேலி: கையில் கயிறு கட்டுவது ஏன்?
உடல் நலத்துடன் வாழ, திருஷ்டியை போக்க கயிறு கட்டுகிறோம்.
ம.தேவகி, நேதாஜிபுரம், கோயம்புத்துார்: ஆண்டாள் பாடிய திருப்பாவை பற்றி...
மார்கழி மாத அதிகாலையில் இதை பாடினால் திருமணம் நடக்கும்.
சாய்.தன்யா, காமராஜ் நகர், கடலுார்: திருவெம்பாவை உற்ஸவம் என்றால்...
மார்கழியில் நடராஜருக்கு நடக்கும் பத்து நாள் விழா இது.
பி.முருகன், மார்த்தாண்டம், கன்னியாகுமரி: பகவத் கீதை சொல்லும் தத்துவம்...
கடமையைச் செய்; கடவுள் அருளால் பலன் கிடைக்கும்.

