தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : அக் 24, 2024 03:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2024 03:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* தீபாவளி நன்னாளில் எண்ணெய்யில் மகாலட்சுமி குடியிருக்கிறாள்.

* தீபாவளியன்று வடமாநில மக்கள் லட்சுமி குபேர பூஜையை செய்கின்றனர்.

* முரனைக் கொன்றதால் கிருஷ்ணருக்கு 'முராரி' எனப் பெயர் வந்தது.

* நரகாசுரன் ஆட்சி செய்த இடம் பிராக்ஜோதிஷ்புரம். இது அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் உள்ளது.

* இந்திரனின் தாயான அதிதியிடம் குண்டலத்தை அபகரித்தான் நரகாசுரன்.

* ஐப்பசியில் காவிரி நதியில் நீராடுவதை 'துலா ஸ்நானம்' என்பர்.

* தீபாவளியன்று விளக்கேற்றி குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வழிபடுங்கள்.

* சமண சமயத்தை சீர்படுத்தியவர் மகாவீரர். அவர் முக்தி அடைந்த நாளே தீபாவளி.

* குப்த பேரரசில் தத்துவவாதியாக இருந்தவர் வாத்ஸ்யாயனர். இவர் தனது நுாலில் 'யட்ச ராத்திரி' என தீபாவளியைக் குறிப்பிடுகிறார்.

* முன்னோரின் ஆசியைப் பெறும் வகையில் ஜப்பானியர்கள் விளக்கேற்றி கொண்டாடுகின்றனர்.

* ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி திதியையே தீபாவளியாக கொண்டாடுகிறோம்.

* தீபாவளியன்று இரவில் சிவனுக்குரிய மாத சிவராத்திரி வரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us