ADDED : நவ 17, 2023 01:36 PM
* சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து முருகன் பிறந்தவுடன் சூரியனும் அக்னிதேவனும் பார்க்க வந்தனர். அப்போது மயில், சேவலை விளையாடுவதற்கு கொடுத்து சென்றனர். அன்று முதல் முருகனுக்கு வாகனமானது மயில்.
* பின்னர் ஒரு சமயத்தில் வேதமானது முருகனுக்கு மயில் வாகனமாக மாறியது. இந்த வேத மயிலைத்தான் ஆதிசங்கரர் சுப்பிரமணியர் புஜங்கத்திலும், அருணகிரிநாதர் திருப்புகழிலும், போற்றுகின்றனர்.
* கோயில்களில் முருகனின் இடது கைப்புறமாக மயிலின் முகம் இருந்தால் அது இந்திர மயில். அதுவே வலது கைப்புறமாக மயிலின் முகம் இருந்தால் அது அசுர மயில்.
* மயில் வாகனத்தில் முருகன் அமர்ந்து காட்சி தருகிறார். அது போல அவரது வாகனத்திற்கு நிகரான மனதில் இருந்து தான் ஒருவரின் உயர்வான உள்ளம் அன்பு, அறிவு, அருள், ஆற்றல், வீரம், தெய்வீகமாக வெளிப்படும் என்பதை மறைமுக அடையாளமாக வைத்துள்ளனர்.