sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜன 19, 2024 01:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2024 01:34 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டி.பவித்ரன், சிங்கம்புணரி, சிவகங்கை.

*அயோத்தி என்றால் என்ன?

யுத்தம் என்றால் போர். அயுத்தம் என்றால் 'போர் இல்லாத இடம்'. தெய்வீகம், ஐஸ்வர்யம், வீரம் நிறைந்த ஊர் அயோத்தி.

எம்.கிஷோர், வீரவநல்லுார், திருநெல்வேலி.

*ராமாயணம் உணர்த்தும் தத்துவம் என்ன?

பெற்றோர், உடன்பிறந்தோர், மனைவி, குழந்தைகள், உறவினர், நண்பருக்கு விட்டுக் கொடுப்பவனே உத்தமன்.

என்.ஸ்ரீநிதி, மார்த்தாண்டம், கன்னியாகுமரி.

*தற்காலத்தில் ராமாயண கதாகாலட்சேபம் குறைந்து வருகிறதே...

இந்தியா முழுவதும் (தமிழகம் தவிர்த்து) அரசின் ஆதரவோடு ராமாயண கதாகாலட்சேபம் நடக்கிறது.

பி.அனிதா, திட்டக்குடி, புதுச்சேரி.

*ராமருக்கு மட்டும் கோயில்கள் அதிகம் ஏன்?

மனிதனாகப் பிறந்து துன்பத்திற்கு ஆளானாலும் தர்மம் தவறாமல் வாழ்ந்தவர் ராமர். அதனால் அவருக்கு கோயில்கள் அதிகம்.

கே.பவானி, தொட்டபள்ளாபுரா, பெங்களூரு.

*அணிலைப் பற்றி பாடிய ஆழ்வார் யார்?

தொண்டரடிப் பொடியாழ்வார். 'தன் மீது ஒட்டிய கடல் மண்ணை உதிர்த்து, பாலம் கட்ட ராமருக்கு உதவிய அணில் போல நான் இல்லையே' என வருந்தி பாடியுள்ளார்.

ஆர்.ஆராதனா, பீளமேடு, கோயம்புத்துார்.

*ராமனின் அருள் பெற்ற அடியவர்கள் பற்றி....

அனுமன், வால்மீகி, கம்பர், தியாக பரபிரம்மம் என நீண்ட பட்டியல் உண்டு. அயோத்தி ராமர் கோயிலை தரிசிப்பவர்கள் அவரின் அருள் பெற்றவர்கள்.

எல்.அபினவ், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர்.

*முருகனுக்குரிய ஸ்லோகம் ஒன்று சொல்லுங்கள்.

உமாகோமள ஹஸ்தாப்யாம்

ஸம்பாவித லலாடகம்|

ஹிரண்ய குண்டலம் வந்தே

குமாரம் புஷ்கரஸ்ரஜம்||

ஏ.கங்காதரன், மயூர்விகார், டில்லி.

*தைப்பூசத்தன்று எந்த தெய்வத்தை வழிபடுவது சிறப்பு?

பவுர்ணமியும், பூசமும் சேரும் அந்நாளில் சிவன், முருகனுக்கு விழா நடத்துவது நல்லது. அன்று மதுரையில் மீனாட்சியம்மனும், சொக்கநாதரும் தெப்பத்தில் வலம் வருவர்.

வி.சஞ்சய், நிலக்கோட்டை, திண்டுக்கல்.

*முருகனுக்கு பிடித்த ராகம் எது?

சண்முகப்பிரியா. அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் இந்த ராகத்தில் பல பாடல்கள் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us