sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : பிப் 02, 2024 01:48 PM

Google News

ADDED : பிப் 02, 2024 01:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.பூர்ணிமா, பொன்னேரி, திருவள்ளூர்.

*அன்பான அம்பிகை ஏன் காளியாக அவதரித்தாள்?

தீயசக்திகளை அடக்கும் போது சாந்தமான அம்பிகை, உக்கிர வடிவில் காளி ஆகிறாள்.

ஆர்.வைஷ்ணவி, திரிவேணிபுரி, டில்லி.

*சிவனைப் போல அம்மனுக்கும் நந்தி வாகனம் இருப்பது ஏன்?

சிவனும், சக்தியும் இணைந்திருக்கும் கோயில்களில் அம்மனுக்கு நந்தி இருக்கும். அம்மனுக்கான தனிக்கோயில்களில் சிங்கம் இருக்கும்.

வி.கீர்த்தனா, பாகனேரி, சிவகங்கை.

*வாசலில் கடவுளின் உருவத்தை கோலமிடலாமா?

கடவுளின் மீது நம் கால்கள் படலாமா... நீங்களே சொல்லுங்கள்.

எல்.ஆர்த்தி, பள்ளியாடி, கன்னியாகுமரி.

*ஹோமத்தில் இட்ட நாணயங்களை எங்கு வைக்க வேண்டும்?

பணம் வைக்கும் பீரோவில் வைப்பது நல்லது.

வி.எல்.சாந்தகுமார், கல்வராயன்மலை, கள்ளக்குறிச்சி.

*கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம் பாடியவர்கள் யார்?

கந்தசஷ்டி கவசம் - தேவராய சுவாமிகள்.

கந்தகுரு கவசம் - சாந்தானந்த சுவாமிகள்

ஜி.ராம் கிஷோர், கோத்தகிரி, நீலகிரி.

*சுபநிகழ்ச்சியின் போது காப்பு கட்டுவது ஏன்?

திருமணம், கோயில் திருவிழா, கும்பாபிஷேகம் போது அதை நடத்துவோரின் பாதுகாப்புக்காக கடவுளை வழிபட்டு காப்பு கட்டுகின்றனர்.

எஸ்.ஆனந்தன், சன்னபட்னா, பெங்களூரு.

*கோயில் நிலைப்படியைத் தாண்டித்தான் செல்ல வேண்டுமா...

நிலைப்படியை தொட்டு வணங்குவது அவசியம்.

கே.காருண்யா, தேவதானப்பட்டி, தேனி.

*சித்தர்களின் ஜீவசமாதிகளை அமாவாசை, பவுர்ணமியன்று தான் தரிசிக்கணுமா?

இல்லை. எப்போதும் தரிசிக்கலாம்.

பி.பார்த்திபன், ஆழ்வார்குறிச்சி, திருநெல்வேலி.

*என் தாயார் பூஜித்த விக்ரகங்களை எளிய முறையில் தினமும் பூஜிக்கலாமா?

தினமும் பூக்கள் சாத்தி பால் நைவேத்யம் செய்யுங்கள். வெள்ளி அல்லது ஞாயிறன்று பால் அபிஷேகம் செய்யுங்கள்.

ஆர்.தாமோதரன், பிராட்வே, சென்னை.

*எனக்கு வயது 84. தரையில் உட்கார முடியவில்லை. நாற்காலியில் அமர்ந்து சந்தியாவந்தனம் செய்யலாமா?

செய்யலாம். தர்மத்தைக் காப்பாற்றுவதற்கு நன்றி. வருங்கால சந்ததிக்கு நல்வழி காட்டுகிறீர்கள்.






      Dinamalar
      Follow us