sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மே 17, 2024 07:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2024 07:44 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*நோயின்றி வாழ...

எம்.கதிர்வேல், சிங்காநல்லுார், கோயம்புத்துார்.

பாலாம்பிகேச வைத்யேச பவரோக ஹரேதிச|

ஜபேந்நாமத்ரயம் நித்யம் சர்வரோக நிவாரணம்||

நோயின்றி வாழ இந்த ஸ்லோகத்தை மூன்று முறை சொல்லி திருநீறு பூசுங்கள்.

*அனுக்ஞை விநாயகர் என்றால்...

எம்.சிந்துஜா, கண்டமங்கலம், புதுச்சேரி.

அனுக்ஞை என்றால் அனுமதி பெறுதல். யாகம், ஹோமம், திருவிழா கோயிலில் நடக்கும் முன் இவரிடம் அனுமதி பெறுவர்.

*ஸரிகமபதநி என்றால் என்ன?

வி.சங்கர்,கோவில்பட்டி, துாத்துக்குடி.

ஸட்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் ஆகிய ஏழும் சப்த ஸ்வரங்கள். இவற்றின் முதல் எழுத்துக்களே 'ஸரிகமபதநி'. இதுவே இசைக்கு ஆதாரம்.

*நம்பிக்கை துரோகியை சந்திக்க நேர்ந்தால்...

ஆர்.கோமதி, பெரும்பாக்கம், சென்னை.

புன்முறுவலுடன் கடந்து செல்லுங்கள். அவரைக் கடவுள் கவனித்துக் கொள்வார்.

*குரோதி ஆண்டின் பலன் மோசமானதா?

எஸ்.பாலவிநாயகம், அருவங்காடு, நீலகிரி.

குரோதி என்ற பெயரைக் கண்டு பயப்படாதீர்கள். இந்த ஆண்டின் ராஜா செவ்வாய். அவருக்குரிய கடவுளான முருகனை வழிபட்டால் நன்மை சேரும்.

*மாசிக் கயிறு பாசி படியும் என்கிறார்களே...

எம்.வனஜா, பசுமலை, மதுரை.

எமனிடம் இருந்து கணவரைக் காத்தவள் சாவித்ரி. மாசி, பங்குனி இணையும் நேரத்தில் இவளை நினைத்து நோன்புக்கயிறு கட்டினால் சுமங்கலி பாக்கியம் நிலைக்கும். இதை விளக்குகிறது இந்த பழமொழி.

*பயணிகள் இளைப்பாற நிழற்குடை அமைப்பது புண்ணியமா...

பி.ரோகித், திருவட்டாறு, கன்னியாகுமரி.

புண்ணியம். ஆனாலும் உங்கள் பெயரை அதில் விளம்பரம் செய்யாதீர். நிழற்குடை அமைத்தால் நெருப்பு, உஷ்ணம் தொடர்பான தீமை உங்களுக்கு வராது.

*ராம நாம ஜபத்தில் பிரணவ மந்திரமான 'ஓம்' சேர்ப்பதில்லையே...

கே.ஸ்ரீராம், சின்னமனுார், தேனி.

ராம என ஜபித்தால் போதும். பிரணவ மந்திரம் இதில் அடங்கியுள்ளது.

*திருமணத்தை 'கால்கட்டு' என்பது ஏன்?

எம்.பிரீதி, அடகூர், மைசூரு.

திருமண பந்தம் மனிதனை பொறுப்பானவனாக மாற்றும். மனப்பக்குவத்தை தரும். இதையே கால்கட்டு என்கின்றனர்.

*பாலாலயம் செய்த கோயிலில் திருவிழா நடத்தலாமா?

ஆர்.கற்பகம், நொய்டா, டில்லி.

அந்தந்த கோயிலில் முன்னோர் வகுத்த நடைமுறையை பின்பற்றுங்கள். சில கோயில்களில் கும்பாபிஷேகத்திற்கு முன்பும் திருவிழா நடத்துவது உண்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us